பல்லவியும் சரணமும் II - பதிவு 1
Popular Demand (கொஞ்சம் பில்டப் வேணுமில்ல!) காரணமாக, 'பல்லவியும் சரணமும்' is back in the NEW YEAR ! இதற்கு ஐகாரஸ் ஒரு முக்கியக் காரணம்! மேலும், சில சீரியஸ் வகை வலைப்பதிவர்களை (ரோசா, ஜெயஸ்ரீ, ஐகாரஸ், ரவி ஸ்ரீனிவாஸ்) என் வலைப்பதிவுக்கு வரவழைக்க வேறொரு மார்க்கமும் என் சிற்றறிவுக்கு புலப்படாததாலும், அவர்களுக்கும் அவ்வப்பொழுது Relaxation தேவை என்பதாலும், இந்த செகண்ட் ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன் :-) முன் போலவே, உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. எனக்காக வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம், பனி கொண்ட பார்வை ...
2. பொன்னிடம் பாதி, உன்னிடம் பாதி மின்னுவதென்ன சொல்லடி தேவி...
3. உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே ...
4. நீராட நீ செல்லும் யமுனா நதி, மங்கல மங்கையர் மேனியில் ...
5. காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது, இதழுடன் இதழாட ...
6. மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும் போராட்டம் என்ன கோலம் ...
7. வெயில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன, காணாத கண்கள் ரெண்டில் ...
8. கொடுத்தால் தானே வாங்கிக் கொள்ள, படுத்தால் தானே விழித்துக் கொள்ள...
9. நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் ...
10. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை ...
11. இருளுக்குப் பின் வரும் ஜோதி, இது தான் இயற்கை...
12. அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
8 மறுமொழிகள்:
1.உனது விழியில் எனது பார்வை - எம்ஜிஆர் படம்.
2. தன்னந்தனியாக நீ வந்த போது - ?????
3. கடவுள் உள்ளமே... கருணை வெள்ளமே - அன்புள்ள ரஜினிகாந்த
4. காதல் காதல் என்று சொல்ல - காஞ்சனா படம் ( பேர் நினைவில்லை)
5. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - அவளுக்கென்று ஒரு மனம்.
7. இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் - உயர்ந்தவர்கள்
10. நான் பேச நினைப்பதெல்லாம் - பாலும் பழமும்
11. அடிக்கிற கைதான் அணைக்கும் - வண்ணக் கிளி
12. கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ - மன்னாதி மன்னன்
எனக்கு தெரிந்த சில பாடல்களை பிரகாஷ் ஏற்கெனவே எழுதிவிட்ட படியால், 9 ஆம் எண்ணுக்குரிய பாடல்:ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கன்னா- படம் அவன் தான் மனிதன்(? சிவாஜி)
//ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட
//
பிரகாசு,
இதெல்லாம் பாக்கறதே இல்லையா :-(??????
பிரகாஷ்,
காதல் காதல் என்று பேச - உத்தரவின்றி உள்ளே வா
தன்னந்தனியாக நீ வந்த போது -
சங்கமம்
(ராகாகியில் சமீபத்தில் டோண்டு சார் இந்தப் பாட்டப்பத்தி சொல்லியிருந்தார்)
எம்.ஜி.ஆர். பாட்டு..வேணாம், பாலாவே பதில் சொல்லட்டும்.
அன்புடன்
ஆசாத்
// 8. கொடுத்தால் தானே வாங்கிக் கொள்ள, படுத்தால் தானே விழித்துக் கொள்ள..//
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
//
6. மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும் போராட்டம் என்ன கோலம் ...
//
பொம்பள சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சு
மற்ற பாடல்களின் பல்லவிகள் கண்டு பிடிக்கப்பட்டு விட்டன :)
எ.அ.பாலா
//எம்.ஜி.ஆர். பாட்டு..வேணாம், பாலாவே பதில் சொல்லட்டும்.
//
ஆசாத்,
"உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது" பாடல் இடம் பெற்ற படம்: நான் ஏன் பிறந்தேன் ?
எ.அ.பாலா
பாலா : இணையத்துக்கு வருவதே ரொம்ப அரிதாகிவிட்ட சூழ்நிலையில் ( வேற என்ன காரணம், வேலை பளுதான்), ரிலாக்ஸ் பண்ண வந்த போது உங்க பதிவிலே முக்கால்வாசி பாட்டு தெரிஞ்சதால, மத்தவங்களுக்கு வாய்ப்பு கொடுக்காம, எல்லாத்தையும் நானே எழுதிட்டேன்.. ஆர்வக்கோளாறு.. ஹிஹி..
Post a Comment